நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்

புது டெல்லி:

கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்றவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ.58,000 கோடி பரிசுப் பணம் வெல்லப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டுகளில் பங்கேற்று பரிசுப் பணத்தை வென்ற தனிநபர்களுக்கு வருமான வரிக்கான நோட்டீஸ் அனுப்ப தொடங்கி உள்ளது.  

Indian Online Gamers Won Rs 58,000 Crore In Three Years; Income Tax Dept  Wants Them To Pay Tax Now – Trak.in – Indian Business of Tech, Mobile &  Startups

அவர்கள் பெற்ற பரிசுப் பணத்துக்கான வரியைக் கட்டாமல் இருப்பதால் இந்த நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset