செய்திகள் இந்தியா
தூதரகப் பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி: ஈரானைக் கடந்து தாயகம் திரும்பும் இந்தியக் கப்பல்கள்
இந்தியா:
ஹார்முஸ் கடல்வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஈரானுடன் இந்தியா எவ்வித ஒப்பந்தத்தையும் செய்யவில்லை என்றும், ஒவ்வொரு கப்பலின் நகர்வும் தனிப்பட்ட முறையில் கையாளப்படுவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரஸ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஈரானுடனான இந்தியாவின் நீண்டகால உறவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தூதரகப் பேச்சுவார்த்தைகள் நல்ல பலனை அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன் முதற்கட்டமாக, சனிக்கிழமை அன்று சவாலான அந்த கடல் பகுதியைக் கடந்து இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணித்துள்ளன. 'சிவாலிக்', 'நந்தா தேவி' ஆகிய இந்த இரு கப்பல்களும் சுமார் 93,000 மெட்ரிக் டன் எல்.பி.ஜி எரிவாயுவுடன் முறையே முண்ட்ரா, கண்ட்லா துறைமுகங்களை வந்தடைய உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், கடல்வழியாக மேற்குப் பகுதியில் இன்னும் 22 இந்தியக் கப்பல்கள் காத்திருப்பதால், ஈரானுடனான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த கடல்வழியைப் பலவந்தமாகத் திறக்க மற்ற நாடுகளின் கடற்படைகளின் உதவியைக் கோரியுள்ள நிலையில், இந்தியா தூதரக அணுகுமுறையின் மூலம் தீர்வை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் எரிசக்தித் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் கடல்வழியாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போதைய பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ள நிலையில், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளும் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் இந்த வெற்றிகரமான அணுகுமுறையை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஒவ்வொரு நாட்டின் உறவும் அதன் தனிப்பட்ட தன்மையைப் பொறுத்தது என்றும் ஜெய்சங்கர் மேலும் விளக்கமளித்தார்.
ஈரான் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கோமோனியை அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கொலை செய்தபோதும், ஈரானின் பள்ளியில் இஸ்ரேல் ஏவுகணை கொண்டு தாக்கியதில் 165 பள்ளிச்சிறுமிகள் கொல்லப்பட்டபோதும் மௌனம் காத்த இந்தியாவை எதிர்க்கட்சியினரும் காங்கிரஸ் கட்சின் முன்னணித் தலைவர் ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சித்தனர்.எதிர்கட்சிகளின் அழுத்தத்தினால் பல நாட்களுக்கு பிறகு இந்தியா வருத்தம் தெரிவித்தது.
இந்தியா ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குவதற்கும் அமெரிக்கா ஒரு மாதத்திற்கு மட்டும் என்று அனுமதி அளித்துள்ளது பெரும் சர்ச்சையாக உள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
