செய்திகள் இந்தியா
ஓய்வில்லாமல் பறக்கும் விமானிகள்: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக விமானிகளின் பணி நேரத்தை நீட்டிக்கக் கோரிய ஏர் இந்தியா
புதுடெல்லி:
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக விமானிகளின் பணிநேரத்தை தற்காலிகமாக நீட்டிக்க ஏர் இந்தியா நிறுவனம் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டிஜிசிஏ) அவகாசம் கேட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக சில முக்கிய வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, வழக்கமாகச் செல்லும் பாதையை மாற்றி பிற பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுவதால் நேரம் அதிகமாக விரயமாகிறது.
ஆகவே, சர்வதேச விமானிகளுக்கு விமானப் பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகளில் (FDTL) இருந்து தற்காலிக விலக்கு அளிக்குமாறு, விமான ஒழுங்குமுறை ஆணையமான பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டிஜிசிஏ) ஏர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகளின் (FDTL) கீழ், விமானிகளுக்கு வாரத்திற்கு 48 மணிநேரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். இது முந்தைய 36 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது, "இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச விமானிகளுக்கு பகல் நேரத்தில் அதிகபட்சமாக 13 மணிநேரமும் இரவு நேரத்தில் 10 மணிநேரமும் பணி நேரம் அனுமதிக்கப்படுகிறது" என்று மூத்த விமானி ஒருவர் கூறினார்.
இந்தப் போர்ச்சூழல் தணியும் வரை மட்டுமே விலக்கு அளிக்குமாறு கேட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதாலும், இப்போது ஈரானிய வான்வெளி மூடப்பட்டதாலுமே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
