செய்திகள் இந்தியா
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
நியூ டெல்லி:
மத்திய பிரதேசத்தின் இண்டோர் நகரில் கழிவுநீர் குழாய்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷ வாயுவை சுவாசித்ததால் இரு தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தனர்.
கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரத்தின் ஒரு பகுதி குழாய் சுத்தம் செய்யும் பணியின் போது தவறுதலாக கழிவுநீர் குழியில் விழுந்ததால் இந்தச் சம்பவம் ஏற்பட்டது என்று கூடுதல் துணை போலீஸ் ஆணையர் சுமித் கெர்கட்டா கூறினார்.
“அந்தக் குழாயை மீண்டும் எடுக்க பணியாளர் ஒருவர் குழிக்குள் இறங்கினார். இருப்பினும் அவர் விஷ வாயுவுக்கு உட்பட்டதால் மயங்கி விழுந்தார்.
“அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு பணியாளரும் அந்தக் கழிவுநீர் குழிக்குள் இறங்கியபோது மயங்கி விழுந்தார்.
“அந்த இருவரும் கழிவுநீர் குழியில் இருந்த விஷ வாயுவால் ஏற்பட்ட மூச்சுத்திணறலின் காரணமாக உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், துணை போலிஸ் ஆணையர் ஸ்ரீகிருஷ்ண லால்சந்தானி தெரிவித்ததாவது, உயிரிழந்தவர்கள் இண்டோர் நகராட்சி ஊழியர்களான கரண் யாதவ், அஜெய் டோடி ஆவர்.
அந்த இரு பணியாளர்களும் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவுநீர் குழிக்குள் இறங்கியதாக சாட்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் நடந்த இரண்டு மணி நேரம் கழித்தும் போலிசார், மாநகராட்சி அதிகாரிகள், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் அதிகாரிகள் வருவதற்கு முன் இரு பணியாளர்களையும் கழிவுநீர் குழியிலிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்தனர்.
இண்டோர் மாநகராட்சி தெரிவித்ததாவது, செப்டிக் தொட்டியைக் காலி செய்த பிறகு மாநகராட்சி வாகனத்திலிருந்து நீரை வடிகால் குழிக்குள் வெளியேற்றும் போது அந்த இரு பணியாளர்களும் உயிரிழந்ததாக வேறு ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
