செய்திகள் இந்தியா
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
டெல்லி:
மேற்கு டெல்லியின் மட்டியாலா பகுதியில் உள்ள மீன் சந்தையில் புதன், வியாழன் நள்ளிரவு இடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க பெரிய அளவில் தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரவு 11.55 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததையடுத்து 23 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. ஆனால் பல கடைகள், அருகிலுள்ள சில குடிசைகள் தீக்கிரையாகியிருக்கலாம் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை.
இந்த சம்பவம், சமீபத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது. மார்ச் 4 அன்று ஹோலி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் 26 வயது தருண் என்ற இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது.
அந்தச் சம்பவத்துடன் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 14 பெரியவர்கள், 2 சிறுவர்கள் அடங்குகின்றனர்.
இதற்கிடையில், கொலை வழக்கில் தொடர்புடைய ஒரு சிறுவன் காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை போலிசார் மறுத்துள்ளனர்.
அந்தச் சிறுவன் மார்ச் 5 அன்று கைது செய்யப்பட்டு சட்டப்படி சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், பின்னர் சிறுவர் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்புவது குற்றமாகும் என்றும், சமூக ஊடகங்களை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
