செய்திகள் இந்தியா
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
டெஹ்ரான்:
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் இந்திய சரக்கு கப்பல்களுக்கு ஈரான் தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தப் பகுதி உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேற்காசிய எண்ணெய் உற்பத்தி நாடுகளிலிருந்து உலகின் பல பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் இந்த நீரிணை வழியாகவே பயணம் செய்கின்றன.
சமீப காலமாக அப்பகுதியில் பாதுகாப்பு நிலைமை பதற்றமாக உள்ளதால், கடற்பாதை பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவைச் சேர்ந்த சில சரக்கு கப்பல்கள் தற்காலிகமாக பயணத்தை நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை இந்தியாவின் கடல் வர்த்தகத்திலும், எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, ஈரான் அதிகாரிகள் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கடல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு நல்லெண்ண அடிப்படையில சென்று வந்த ஈரான் கப்பலை அமெரிக்க வான் படை இந்தியப் பெருங்கடலில் தாக்கியதும் அதிலிருந்த 200 மாலுமிகள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்
August 13, 2026, 5:18 pm
அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி படைகளைக் குவித்து வரும் சீனா
August 12, 2026, 6:04 pm
அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டது: ராகுல் கிண்டல்
August 12, 2026, 5:58 pm
இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணம்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
