செய்திகள் இந்தியா
வட்டார அமைதி, ராஜதந்திர அவசியம் குறித்து இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் பேச்சு
புதுடில்லி:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் இன்று அதிகாலை தொலைபேசி வழியாகப் பேசினர்.
அப்போது அந்தப் வட்டாரத்தில் நிலவி வரும் தீவிரமான சூழல் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பேச்சுவார்த்தை, ராஜதந்திர ரீதியிலான தீர்வுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
பதற்றங்கள் அதிகரிப்பது குறித்தும், பொதுமக்கள் உயிரிழப்பு, பொதுக் கட்டமைப்புகள் சேதமடைவது குறித்தும் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.
இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட சரக்குகளின் தடையற்ற போக்குவரத்து ஆகியவை இந்தியாவின் மிக முக்கியமான முன்னுரிமைகள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
போர் தீவிரமடைவது எந்தத் தரப்பிற்கும் நன்மையைத் தராது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மோதல்களைக் குறைத்து ராஜதந்திரப் பாதையில் பயணிக்கத் தேவையான அனைத்து ஆக்கபூர்வமான முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
மேலும், புனிதமான ரமலான் மாதத்தில் போர் மூண்டது குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர், வரவிருக்கும் நவ்ரூஸ் புத்தாண்டு அந்தப் பிராந்தியத்தில் அமைதியையும் மௌனத்தையும் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே அனைத்துலக அரங்கில் இந்தியாவின் சமச்சீரான, ஆக்கபூர்வமான அணுகுமுறையைப் ஈரான் அதிபர் பாராட்டினார்.
மேலும் மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த நெருக்கடியான சூழலில் இந்தியா அமைதிக்கான குரலாக செயல்பட முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
