செய்திகள் இந்தியா
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
டெல்லி:
இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது துப்பாக்கியுடன் தாக்குதல் நடத்தி கொலை முயற்சி செய்யப்பட்ட சம்பவம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது.
88 வயதான பாரூக், ஜம்மு நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது, துப்பாக்கியுடன் வந்த ஒருவர் மிக அருகில் வந்து அவரை தாக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மகனும் தற்போதைய முதல்வருமான ஒமர் அப்துல்லா, சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவலில், “தனது தந்தை தாக்குதலிலிருந்து நெருக்கடியாக தப்பினார்; பாதுகாவலர் உடனடியாக தலையிட்டு சூடு இலக்கை அடையாமல் தடுத்தார்” என்று கூறினார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 65 வயது உள்ளூர் நபர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் போது சிலர் தாக்கிய காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
