செய்திகள் இந்தியா
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: குறைந்தது 10 நோயாளிகள் உயிரிழப்பு
இந்தியா:
இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் அதிர்ச்சி சிகிச்சைப் பிரிவில் (trauma care unit) திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஐந்து பேர் தீவிரமாகக் காயமடைந்துள்ளனர். ஆனால் அந்தக் காயங்கள் தீ விபத்தால் ஏற்பட்டதா அல்லது முன்பே இருந்த காயங்களா என்பது தெளிவாக தெரியவில்லை.
திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) குறைந்தது 23 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 10 பேர் தீ பரவிய இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக மருத்துவ பணியாளர்களும் பாதுகாப்பு பணியாளர்களும் தங்களுடைய உயிரையே பணயம் வைத்து செயல்பட்டனர். அந்த முயற்சியின் போது அவர்களும் காயமடைந்துள்ளனர், தற்போது அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று மாஜி தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
