செய்திகள் இந்தியா
ஆந்திராவில் துயர சம்பவம்: மோட்டார் சைக்கிளின் புகையினால் நால்வர் பலி
ஆந்திரா:
ஆந்திராப் மாநிலத்தில், வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையைச் சுவாசித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முரளி என்பவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் அண்மையில் பழுதுபார்க்கப்பட்டது. இயந்திரத்தைச் சரிசெய்த மெக்கானிக், வண்டியை இரவு முழுவதும் இயங்கிய நிலையிலேயே வைத்திருக்குமாறு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, முரளி தனது வீட்டின் உட்பகுதியிலேயே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார்.வீட்டின் தரைத்தளத்தில் மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்ததால், அதிலிருந்து வெளியேறிய நச்சுப் புகை வீடு முழுவதும் பரவியது.
இதனால் அங்கே ஆழமான உறக்கத்தில் இருந்த முரளியின் 15 வயது மகன், 7 வயதான இரட்டைப் பெண் குழந்தைகள், முரளியின் 75 வயது தந்தை ஆகிய நால்வரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
வீட்டின் முதல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த முரளியும் அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக இந்த நச்சுப் புகையிலிருந்து உயிர் தப்பியுள்ளனர். மூடப்பட்ட அறைக்குள் வாகனத்தை இயங்கவிட்டது இத்தனை பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
