
செய்திகள் மலேசியா
பெரிக்கத்தான் அல்லது முவாஃபகட்?: அடுத்த வாரம் முடிவு செய்யும் பாஸ்
கோலாலம்பூர்:
15ஆவது பொதுத்தேர்தலில் எந்த அணியுடன் இணைந்து போட்டியிடுவது என்பதை பாஸ் கட்சி அடுத்த வாரம் முடிவு செய்யும் என்று அதன் ஆன்மிகத் தலைவர் ஹஷிம் ஜாசின் தெரிவித்துள்ளார்.
பெரிக்கத்தான் நேசனல் அல்லது முவாஃபகட் நேசனல் ஆகிய அணிகளில் ஏதாவது ஒன்றை பாஸ் கட்சி தேர்வு செய்ய உள்ளது.
பெரிக்கத்தான் நேசனலைக் கைவிட்டு முவாஃபகட் அணியில் இணைந்து அம்னோவுடனான உறவைத் தொடரும் நிலை அல்லது பெரிக்கத்தான் நேசனல் அணியிலேயே நீடிப்பது என இரு வாய்ப்புகளைக் கொண்டுள்ளது பாஸ் கட்சி.
அம்னோ, பெர்சாத்து தலைவர்களில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அண்மையில் சந்தித்துப் பேசியதாக குறிப்பிட்ட ஹஷிம் ஜாசின், மொஹைதின் யாசின், சாஹித் ஹமிதி ஆகியோருடனான அந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு பாஸ் கட்சிக்குள் விவாதம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
"இது குறித்து அடுத்த வாரத்தில் முடிவு செய்யப்படும். அம்னோ, பாஸ் கட்சிகளை இணைப்பதற்கு பாஸ் கட்சி முயற்சி மேற்கொண்டது.
"பக்காத்தான் ஹரப்பானில் நேரடியாக எதிர்க்கும் வகையில் இம்மூன்று கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியும் தனித்து முடிவெடுக்கும்.
"பாஸ் கட்சியைப் பொருத்தவரை அம்னோ, பெர்சாத்து ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது," என்றார் ஹஷிம் ஜாசின்.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm