நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி

கூச்சிங்:

டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி 2030க்குப் பிறகு மாநில வளர்ச்சிக்கான நான்கு முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார். அவை புதுப்பிக்கக்கூடிய சக்தி வளங்கள், செமிகண்டக்டர் தொழில்கள், விண்வெளி, மனிதவள மேம்பாடு என்ற நான்கு துறைகளாகும்.

மாநில வளர்ச்சிக்கான திட்டங்களில், நீர் மின்சாரம், உயிரி மின்சாரம், சூரிய சக்தி, ஹைட்ரஜன் சக்தி வளங்களை பயன்படுத்தி வளமான எரிசக்தி திறனை 2030க்குள் உயர்த்துவதாகவும், மற்ற மாநிலங்களுக்கும் அதனை வழங்க திட்டமிட்டுள்ளதாகும் அவர் குறிப்பிட்டார்.

செமிகண்டக்டர் துறையில் சராவாக் பிரிட்டிஷ் கூட்டாளர்களுடன் இணைந்து, கணினி சிப்களையும், செயற்கை நுண்ணறிவு சிப்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. 

விண்வெளி துறையில் குறைந்த செலவில் செயல்படும் நானோ செயற்கைக்கோள்களின் மூலம் தரவுத்தகவல் சேகரிப்புகளில் ஆராய்ச்சி விரிவாக்கம் செய்யப்படும்.

மனித வள மேம்பாட்டிற்காக, சிறந்த கல்வி, பயிற்சி வாய்ப்புகள், இலவச உயர் கல்வி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

2030-யின் வளர்ச்சிக்கான திட்டங்களை இப்போது தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டான் ஸ்ரீ அபாங் ஜொஹாரிக்கு மலேசிய பொருளாதார மன்றத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset