செய்திகள் மலேசியா
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கை வாரியத் தலைவர் முகமட் ரட்ஸி மனான் வெளியிட்ட தனி அறிவிப்பின்படி,
அவர்கள் கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாதுல் ஹுசிர் அயோப், பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அசஹாரி ஹசம்சான் ஆவர்.
இன்று கட்சி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் பதவி நீக்கம் செய்யப்பட்டதைப் போலவே, கட்சி அரசியலமைப்பின் பிரிவு 9.1.4ஐ மீறியதாகக் கூறி அவர்கள் நீக்கப்பட்டதாகக் கடிதங்கள் கூறுகின்றன.
இதே கடிதத்தை மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமது ஃபைசல் வான் அகமது கமல் பெற்றார்.
அவரது உறுப்பினர் பதவி முன்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
பொது இடத்தில் குப்பை வீசிய நால்வர் நீதிமன்ற உத்தரவால் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்
February 13, 2026, 12:30 pm
சிபுவில் எட்டு கடைகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்தது
February 13, 2026, 12:25 pm
