செய்திகள் மலேசியா
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
கோலாலம்பூர்:
ஜாலான் செராஸ் பெர்டானா, பத்து 11 பகுதியில் செவ்வாய்க்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் எதிர்திசையில் சென்று ஒரு காரை மறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்ததாவது, சம்பவம் தொடர்பான காணொலி ஒன்று சமூக ஊடகத்தில் ஒரு நபரால் பதிவு செய்யப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் மாலை சுமார் 5.40 மணியளவில் இடம்பெற்றது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் பழுதடைந்த தங்களது வாகனத்தை இழுத்துச் சென்றதாகவும், பின்னர் அந்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஓட்டுநருடன் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர், அவர்கள் காரை நோக்கி எதிர்திசையில் சென்று வாகனத்தை மறித்துள்ளனர்.
இந்த செயல், மற்ற சாலைப் பயனாளர்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் சாலைப் போக்குவரத்து சட்டம் பிரிவு 79(1)இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:14 pm
பொது இடத்தில் குப்பை வீசிய நால்வர் நீதிமன்ற உத்தரவால் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்
February 13, 2026, 12:30 pm
சிபுவில் எட்டு கடைகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்தது
February 13, 2026, 12:25 pm
