செய்திகள் மலேசியா
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
கோலாலம்பூர்:
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நாடு முழுவதும் நடத்தப்படும்.
மலேசிய லோரி ஓட்டுநர்கள் போராட்டக் குழுவின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.
லோரியில் அளவுக்கு அதிகமான எடை கொண்ட பொருட்களை ஏற்றி செல்வதால் ஓட்டுநர்கள் ஜேபிஜே அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அதே வேளையில் லோரி ஓட்டுநர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் நிற்க வைக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு 8,000 முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதத்தை செலுத்தவில்லை என்றால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது.
இதனால் லோரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.
இதே போன்று லோரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் எந்தவொரு தீர்வும் இல்லை.
இதன் அடிப்படையில் தான் கடந்தாண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் முன் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் இன்று வரை பதில் சொல்லவில்லை.
இதே போன்று பிரதமரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் அடிப்படையில் தான் லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்.
சீனப் பெருநாளுக்கு பின் இந்த பேரணி நடத்தப்படும்.
இப்பேரணி நாடு முழுவதும் பெரும் தாக்கத்ததை ஏற்படுத்தும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
பொது இடத்தில் குப்பை வீசிய நால்வர் நீதிமன்ற உத்தரவால் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்
February 13, 2026, 12:30 pm
சிபுவில் எட்டு கடைகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்தது
February 13, 2026, 12:25 pm
