நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹம்சா ஜைனுடின் நீக்கம்

கோலாலம்பூர்:

பெர்சத்து ஒழுங்கு நடவடிக்கை வாரியம் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினை பதவி நீக்கம் செய்துள்ளது.

இந்த நீக்கம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஒழுங்கு நடவடிக்கை வாரியத் தலைவர் முகமட் ரட்ஸி மனான் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த நீக்கம் அமைந்துள்ளது.

இன்று தேதியிட்ட கடிதத்தில், கட்சி சட்டவிதியின் 9.1.4ஆவது பிரிவை மீறியதாகக் கூறி ஹம்சா நீக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை வாரியம் 2016 பிப்ரவரி 12ஆம் தேதியன்று கூடி, இந்தக் கடிதம் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பிரிவு 22.5 இன் கீழ் டத்தோஶ்ரீ ஹம்சா கட்சி உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டதாக இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset