செய்திகள் மலேசியா
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
தவாவ்:
தவாவிலுள்ள பாசோங் வர்த்தக மையப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சம்பவத்தில், தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டு நபர் ஒருவரும் ஒரு காவல் அதிகாரியும் காயமடைந்தனர்.
சாம்பின் பியூ, தவாவ் மாவட்ட காவல் துறை துணைத் தலைவர் தெரிவித்ததாவது, காலை 10.40 மணியளவில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் வெள்ளை நிற பெரோடுவா விவா காரை சோதனைக்காக நிறுத்தினர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.
பின்னர் அவரை துரத்தி பிடிக்கும் போது, சந்தேகநபர் ஒத்துழைக்க மறுத்ததால் காவலரின் துப்பாக்கியிலிருந்து தவறுதலாக ஒரு குண்டு பாய்ந்தது. அது சந்தேகநபரின் இடது கையைத் துளைத்தது. மேலும் உதவியிருந்த மற்றொரு காவலர் வலது தொடையில் காயமடைந்தார்.
முதல் கட்ட விசாரணையில், சந்தேகநபரிடம் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் இல்லை என்றும், வேறு ஒருவரின் அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
வாகன சோதனையில் போதைப்பொருளாக சந்தேகிக்கப்படும் மெத்தாம்பெட்டமின் கைப்பற்றப்பட்டது.
காயமடைந்த இருவரும் தவாவ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:35 pm
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
