நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது

குவாந்தான்: 

புக்கிட் பெர்லிண்டுங் போலிஸ் குடியிருப்பு வளாகத்தில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஒருவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பகாங் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்ததாவது, சம்பவம் இரவு சுமார் 11 மணியளவில் இடம்பெற்றது. 

சந்தேகநபர் அந்த குடியிருப்பு பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படுகிறது.

அந்த நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு, குடியிருப்புக்கு திரும்பிக் கொண்டிருந்த சில போலீஸ் அதிகாரிகள் அந்த நபரை கவனித்துள்ளனர். 

போலீசார் இருப்பதை உணர்ந்த சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்றபோதிலும், குடியிருப்பு வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.

ஆரம்ப விசாரணையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை திருட முயன்றது தெரியவந்துள்ளது.

முப்பது வயதின் தொடக்கத்தில் உள்ள அந்த நபரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், அவர் முன்னாள் கைதியும் ஆவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset