
செய்திகள் மலேசியா
ஷா ஆலமில் கோவிட் -19 தடுப்பூசி பிராண்டைத் தேர்வு செய்யக் கோரும் மூத்த குடிமக்கள்; தாமதமாகும் தடுப்பூசி போடும் பணி; தேதிகள் மாற்றியமைக்கப்பட்டாலும் தேர்வு செய்ய முடியாது: கைரி ஜமாலுதீன்
கோலாலம்பூர்:
சிலாங்கூர், ஷாஆலமில் அமைந்துள்ள செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் (Setia City Convention Centre) மூத்த குடிமக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடுவது கணிசமாக குறைந்துள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கோவிட் -19 தடுப்பூசியின் குறிப்பிட்ட (brand) பிராண்டை அவர்கள் தேர்வு செய்ய விரும்பியது இந்தக் குறைவான எண்ணிக்கைக்கு கரணம் என்று தெரிகிறது.
ஆங்கில தினசரியான தி ஸ்டார் இந்த நிலை குறித்து செய்தியை பதிவு செய்திருக்கிறது, தடுப்பூசி விநியோக மையத்தின் (பிபிவி) செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி, தங்களது தடுப்பூசி நேர வருகைகளைக் காட்டிய பலர் தடுப்பூசி போட மறுத்துவிட்டதாக அது பதிவு செய்துள்ளது. ஏனெனில், அவர்களுக்கு தற்போது போட இருக்கும் கோவிட் -19 தடுப்பூசியை அவர்கள் விரும்பவில்லை; தற்போதுள்ள பிராண்டுகளைத் தவிர்த்து இதர பிராண்டுகளையே மூத்த குடிமக்கள் விரும்புகிறார்கள்.
"அவர்களது நிலைப்பாட்டை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், ஏனென்றால் அவர்கள் முன்கூட்டியே கையெழுத்திட்டிருந்தார்கள். அவர்களுக்கு உரிய நேரமும் இடங்களும் ஒதுக்கப்பட்டன.
"இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனெனில், இந்தக் கடினமான தொற்றுக் காலங்களில், மக்கள் முதலில் தங்கள் சொந்த ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்," என்று செய்தித் தொடர்பாளர் மேற்கோளிட்டு கூறினார்.
கோவிட் -19 தடுப்பூசிகளை மறுத்தவர்கள் மீண்டும் ஒரு முறை அழைக்கப்படுவார்கள், மேலும், அவர்களின் தடுப்பூசிக்கான நேரமும் புதிய தேதிகளும் வழங்கப்படும். செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், 'மூத்த குடிமக்களின் மறுதேதியிலும் அவர்களுக்கு விருப்பமான கோவிட் -19 தடுப்பூசி பிராண்ட் கிடைக்குமா என்று உத்தரவாதம் அளிக்க முடியாது' என்றும் தெரிவித்தார்.
"இந்த தொற்றுநோய்களின் போது, கிடைக்கக்கூடிய எந்தவொரு தடுப்பூசியும் சிறந்ததே என்பதை மக்கள் உணர வேண்டும், அவர்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவர்களால் எங்கும் பயணிக்க முடியாது" என்று செய்தித் தொடர்பாளர் மேற்கோளிட்டுள்ளார்.
கோவிட் -19 தடுப்பூசிக்கு ஏற்கனவே நியமனங்கள் உள்ளவர்களுக்கு மற்ற பிராண்டுகளின் விருப்பம் காரணமாக அவர்களின் தடுப்பூசிகளைப் பெறுவதை நிராகரிக்க வேண்டாம் என்று தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் அறிவுறுத்தியதாகவும் 'தி ஸ்டார்' தெரிவித்துள்ளது.
"நாங்கள் அவர்களின் வருகையை மறுபரிசீலனை செய்வோம், ஆனால், அவர்கள் இது குறித்து முடிவெடுக்க முடியாது, அதாவது, தடுப்பூசியை நீங்கள் தேர்வு செய்ய முடியாது என்று நாங்கள் அவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அமைச்சர் கோடி காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm