செய்திகள் மலேசியா
156 வெளிநாட்டு குடியேறிகள் கைது: சைபர் ஜெயாவில் அதிரடி சோதனை
கோலாலம்பூர்:
சைபர் ஜெயாவில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனை
நடவடிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாத 156 வெளிநாட்டுக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத குடியிருப்பு ஒன்றில் திங்கட்கிழமை இரவு இமிகிரேஷன் அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 202 வெளிநாட்டுக் குடியேறிகள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் Immigration director-general Khairul Dzaimee Daud கைருல் தெரிவித்துள்ளார். 12 பெண்களும் 2 குழந்தைகளும் இவர்களில் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் 4 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர் என்று குறிப்பிட்ட கைருல், 156 குடியேறிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் புத்ரா ஜெயாவுக்கு மேல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குடியேறிகள் தங்கியிருந்த இடத்தில் சட்டவிரோதமாக மின் இணைப்புக்கும் தண்ணீர் விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், சோதனை நடவடிக்கையில் காவல்துறை தேசிய காவல்துறை உள்ளிட்ட முகமைகளும் பங்கேற்றதாகத் தெரிவித்தார்.
"இந்தச் சட்டவிரோத குடியிருப்பின் மூலம் கிருமித் தொற்று பரவ வாய்ப்புள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்காக வகுக்கப்பட்டுள்ள SOPகள் பின்பற்றப்படவில்லை," என்றார் கைருல்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
