நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொடர்ந்து அதிகரிப்பு: தீவிர சிகிச்சை பிரிவில் 902 பேர்

கோலாலம்பூர்:

கொரனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 902 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 447 பேருக்கு செயற்கை சுவாசம் (சுவாச உதவி) அளிக்கப்படுவதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது மெல்லசரியத் தொடங்கி உள்ளது. இது மக்கள் மத்தியில் நிம்மதியை அதிகரித்துள்ளது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 82 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் நேற்றைவிட இன்று தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 902 பேர் இப்பிரிவில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

கோவிட் 19 நோய்க்காக நாட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 84,269 ஆக உள்ளது என்றார் டாக்டர் நூர் ஹிஷாம். மேலும் தொற்றுப் பரவல் விகிதம்  குறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், தற்போது எதிர்கொண்டுள்ள அபாயத்திலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீண்டுவிடவில்லை எனவும் சுட்டிக் காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset