நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

மும்பை:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் உயர்த்தி 3 முதல் 3.25 சதவீதமாக்கியது. அந்த வங்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நியச் செலாவணி வர்த்தகம் வியாழக்கிழமை மிக மந்தமாக நடைபெற்றது.

அதன் விளைவாக, அன்று நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 97 காசு சரிந்து 80.97 என்ற அளவில் இருந்தது.

மேலும், வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்தன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset