நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தேசப்பற்று, ஒற்றுமையை வலியுறுத்தும் திரைப்படங்களுக்கு நிதி

கோலாலம்பூர்:

மலேசிய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கம் உதவும் என தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

தேசப்பற்று, ஒற்றுமையை வலியுறுத்தும் அம்சங்களுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு நிதி அளிக்கப்படும் என்றார் அவர்.

மேலும், இதற்காக அரசாங்கம் தனியாக நிதி அமைப்பை உருவாக்கும் என்றும் திரையுலகத்தினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

"திரைப்படத் துறையினருக்காக தனி நிதி அமைப்பை உருவாக்குவது தொட்பாக நிதி அமைச்சிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

"சுமார் ஐம்பது மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு நிதி அமைச்சிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அதன் மூலம் திரையுலகத்தினருக்கு அரசாங்கத்தால் உதவ முடியும்.

"கூட்டரசு நிதியின்கீழ் மூலம் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என்பதுடன், கூட்டரசு நிதிநிலை அறிக்கையின் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்," என்றார் அனுவார் மூசா.

இதற்கிடையே அடுத்த மாத இறுதிக்குள் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15ஆவது பொதுத்தேர்தலை விரைவில் நடத்துமாறு அம்னோ உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உடன், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset