நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னைக்கு திரும்பினார்  நடிகர் விஜய்

சென்னை:

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னைக்கு திரும்பியுள்ளார் நடிகர் விஜய்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. 

இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கோட் படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை உருவாக்கியுள்ள விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில் ரஷியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் விஜய். அவரது வீட்டில் இருந்து சிவப்பு நிற காரில் வாக்களிக்க செல்லவிருப்பதாக ரசிகர்கள்  விடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். 

கடந்த முறை அவர் சைக்கிளில் சென்று வாக்களித்தார். அந்த சைக்கிளில் திமுகவின் வண்ணமான கருப்பு சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது ஊடகத்தில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset