நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகிறது

சென்னை: 

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரித்துள்ளனர். ரத்னம் படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். 

தாமிரபரணி, பூஜை ஆகிய இரு வெற்றிப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷாலுடன் மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரி இணைந்துள்ளார். 

இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம். ஆடியன்ஸை மதித்து படம் எடுத்துள்ளோம். பார்க்கும் போது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று இயக்குநர் ஹரி கூறினார். 

மேலும், மூன்றாவது படம் எனும் போது எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது, உடனே இதைப்பண்ணலாம் என்றேன்.இந்தப்படம் ஹரி சாரின் உழைப்பு, அவர் யுனிவர்ஸில் நாங்கள் வேலை பார்த்துள்ளோம் என்று நடிகர் விஷால் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset