நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரோமியோ திரைப்படத்தை அன்பே சிவமாக ஆக்கிவிடாதீர்கள் : விஜய் ஆண்டனி 

சென்னை: 

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் சிலர் இத்திரைப்படத்தைத் தவறாக விமர்சனம் செய்து மக்களின் மனதில் எதிர்மறையான கருத்துக்களைப் புகுத்த நினைக்கும் சில தரப்புக்கு எதிராக நடிகர் விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார். 

புளூ சட்டை மாறன் போன்ற இன்னும் சிலர் திரைப்படத்தைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இவர்களின் பேச்சை நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களைக் கொண்டாடாமல் தமிழ்ச்சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், ரோமியோ திரைப்படத்தை அன்பே சிவமா ஆக்கிடாதீங்க என்று விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டார் 

நடிகர் விஜய் ஆண்டனி, யோகி பாபு நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளியாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset