நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் தந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ்

சென்னை: 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்,   சமீபத்தில் நடந்த பத்திரிக்கை சந்திப்பில் கூறியது போலவே  தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஸ்கூட்டி அன்பளிப்பாக தந்து அசத்தியுள்ளார். 

மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல உதவிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே!  அவர் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக கை கொடுக்கும் கை எனும் ஆதரவு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். 

அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள் என்று பேசியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டில், மாற்றுத்திறனாளி குழுவினரைச் சந்தித்து பாராட்டியதோடு, சொன்னது போலவே ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்கூட்டி வழங்கி அசத்தியுள்ளார்.  தன்னலமற்ற உதவிகளை செய்து வரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸை அனைத்து தரப்பினரும் பாரட்டி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset