நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அமீர் கானுக்கு எதிரான DEEP FAKE தேர்தல் பிரச்சார வீடியோ: போலீஸார் வழக்கு

மும்பை:

பாலிவுட் நடிகர் அமீர் கான்  பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற DEEP FAKE விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட 27 வினாடி DEEP FAKE விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இதையடுத்து, நடிகர் அமீர்கான் தரப்பில் மும்பை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் போலி சித்தரிப்பு விடியோவை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பிய அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்து இந்த விடியோ எங்கிருந்து வெளியானது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் அமீர் கானின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமீர் கானின் 35 ஆண்டுகால திரைத்துறை அனுபவத்தில் அவர் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் நிலைப்பாடு கொண்டிருந்ததில்லை என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset