நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் கூலி: சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சென்னை: 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தலைவர் 171 படத்திற்குக் கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் TITLE REVEAL வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் தலைப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 

முழுக்க முழுக்க அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வீடியோவின் இறுதி குறிப்பிட்டிருந்தனர். 

கூலி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். அன்பறிவு இருவரும் சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றுகின்றனர். 

விக்ரம், லியோ வை தொடர்ந்து தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவருடன் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைகிறார். 

கூலி படத்தின் TITLE REVEAL TEASER தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டிங்காக உள்ளது

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset