செய்திகள் மலேசியா
இன்று கண்டறியப்பட்ட 30 தொற்றுத் திரள்களில் 18 பணியிடங்களில்
கோலாலம்பூர்:
நாட்டில் தற்போது பணியிடங்களில்தான் அதிக அளவிலான கொரோனா தொற்றுத் திரள்கள் (clusters) உருவாவதாகக் கூறப்படுகிறது.
இன்று பதிவான 30 தொற்றுத் திரள்களில் 10 திரள்கள் தொழிற்சாலைகளில் உருவானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
எனவே, பணியிடங்களில் அனைத்து SOPகளும் முறையாகப் பின்பற்றப்படுவதை முதலாளிமார்களும் நிர்வாகமும் உறுதிசெய்ய வேண்டுமென அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
"இன்று 30 தொற்றுத் திரள்கள் புதிதாக கண்டறியப்பட்டன. இவற்றுள் 18 தொற்றுத் திரள்கள் பணியிடங்களிலும் 10 திரள்கள் தொழிற்சாலைகளிலும் உருவாகி உள்ளன.
தேசிய பாதுகாப்பு மன்றம், அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சு ஆகியவை வகுத்துள்ள SOPகளைப் பின்பற்றுதல் அவசியம்," என்று நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
ஜொகூரில் 7 பணியிடத் தொற்றுத் திரள்கள் மூலம் 163 பேருக்கு நோய் தொற்றியது என்றும் சபாவில் 3 திரள்கள் மூலம் 53 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் 3 புதிய பணியிடத் தொற்றுத் திரள்கள், புத்ராஜெயாவில் 8 கெடா, கிளந்தானில் ஒன்று, பினாங்கில் 2 புதிய தொற்றுத்திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பணியிடத் தொற்றுகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியம் என்று நூர் ஹிஷாம் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
புகைமூட்டம்: 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவாகியுள்ளது
October 8, 2026, 2:55 pm
தன் குடிமக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான செலவை ஏற்க மியன்மார் தயாராக உள்ளது: பிரதமர்
October 8, 2026, 2:54 pm
எம்ஏசிசி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நசீர் ஹுசைன் குற்றம் சாட்டுகிறார்
October 8, 2026, 2:53 pm
