
செய்திகள் மலேசியா
சபாவில் டெல்டா கொரோனா வகை பரவியதா? : வெறும் வதந்தி என்கிறது மாநில அரசு
கூச்சிங்:
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா திரிபு சபாவில் பரவி இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது எனத் தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் அதிகம் பரவிய இந்தத் தகவல் பொய்யானது என்று சபா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் கிறிஸ்டினா ருன்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என பெயர் வைத்துள்ளது. இந்நிலையில் சபா மாநில தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தாமான் வங்சா என்ற இடத்தில் டெல்டா திரிபு காணப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தற்போது அந்தப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட MCO அமலில் உள்ளது.
மலேசியாவில் டெல்டா திரிபு பாதிப்பு இருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. எனினும் சபாவையும் இந்தத் திரிபையும் தொடர்புபடுத்தி இப்போது வெளியாகி உள்ள தகவலை நம்பவேண்டாம் என டாக்டர் கிறிஸ்டினா ருன்டி கேட்டுக் கொண்டார். அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள மே 26ஆம் தேதி முதல் சபா மாநில அரசு தடை விதித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm