நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் Foodpanda ஆட்குறைப்புச் செய்துள்ளது

சிங்கப்பூர்:

உணவு விநியோக நிறுவனமான Foodpanda சிங்கப்பூரில் ஆட்குறைப்புச் செய்துள்ளது. செலவைக் குறைக்கவும் லாபத்தைக் கூட்டி போட்டித்தன்மையைக் கட்டிக்காக்கவும் அது முக்கியம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

அதன் தலைமை நிறுவனமான Delivery Hero நிறுவனத்திடம் CNA ஆட்குறைப்பு குறித்துக் கேட்டபோது நிறுவனம் சிறப்பாக செயல்படுவதற்குப் போதுமான லாபத்தைத் தக்க வைப்பது முக்கியம். அது குறையும் போது அதற்கான தீர்வை தேடுவதும் தீர்வை அமல்படுத்துவதும் நிர்வாகத்தின் கடமை என்று அது காரணம் கூறியது. 

எனவே, எங்களுக்கு வேறு வழியில்லை. அதனால், ஆட்குறைப்பு என்ற வேதனை அளிக்கும் இறுதி முடிவை எடுக்கும் நிர்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம் என்று அது குறிப்பிட்டது. 

எத்தனை பேர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டனர் என்ற விவரத்தைச் சிங்கப்பூரின் Foodpanda பேச்சாளர் தெரிவிக்கவில்லை. 

Food delivery firm foodpanda lays off staff in Singapore | The Star

DealStreetAsia செய்தி ஏடு சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனம் சுமார் 5 விழுக்காட்டு ஊழியரை ஆட்குறைப்புச் செய்வதாகக் கடந்த வாரம் கூறியிருந்தது. 

Foodpanda தற்போது ஆசியாவில் 11 நாடுகளில் செயல்படுகிறது. 

அதன் உரிமையாளரான Delivery Hero நிறுவனம் ஜெர்மனியில் இருந்து இயங்குகிறது. உலகெங்கும் 50 நாடுகளில் அது செயல்படுகிறது. 

Shopee எனும் இணைய வர்த்தக நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

அது இவ்வாண்டுத் தொடக்கத்தில் தென்கிழக்காசியா, மெக்சிகோ, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட வட்டாரங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது.

நிறுவனம் விளம்பரப்படுத்திய சில வேலை வாய்ப்புகளையும் கடந்த இரண்டு வாரங்களில் மீட்டுக்கொண்டுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அதன் தலைமை நிறுவனமான Sea  நிறுவனம் நட்டத்தைச் சந்தித்துவரும் வேளையில் அத் தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset