நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலாளிமார்கள் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

MCO காலகட்டத்தில் பின்பற்றப்பட வேண்டிய SOPகளை மீறுவதாக முதலாளிமார்கள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

பணி நேரத்துக்கும் மேலதிகமாக வேலை பார்க்குமாறு நிர்ப்பந்திப்பது, அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான முறை அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஆகிய புகார்களே அதிகம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற அனைத்துப் புகார்கள் குறித்தும் தொழிலாளர் துறை மூலமாக விசாரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், SOPகளை மீறும் முதலாளிமார்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

"தயவு செய்து தற்போதைய நிலைமையை (முதலாளிமார்கள்) சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். பிறகு நடவடிக்கை எடுத்தால் எங்களைக்  குறை கூறக்கூடாது. கொரோனா தொற்றுப்  பரவல் சங்கிலியை உடைத்தெறிவது என்பது  அனைத்துத் தரப்பினரின் பொறுப்பு என்பதை உணரவேண்டும்.

"அலுவலகம், பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டால் அதைப் பின்பற்ற வேண்டும். அவ்வளவுதான்," என்றார் சரவணன்.

SOPகளை முறையாக்க கடைபிடிக்காத நிறுவனங்களை மூடுமாறு  உத்தரவிட மனிதவள அமைச்சுக்கு அதிகாரம் உண்டு என அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையே 446 சட்டப் பிரிவின் கீழ் இதுவரை 242 விசாரணைகள் நடைபெற்றதாகவும் அவற்றுள் 49 சம்பவங்களில்  352,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset