
செய்திகள் மலேசியா
இந்தியாவில் வீசப்பட்ட கொரொனா சடலம் சபாவில் கரை ஒதுங்கியதா? சபா காவல்துறை ஆணையாளர் விளக்கம்
கூச்சிங்:
இந்தியாவில் கோவிட்-19 நோயால் பலியான ஒருவரது சடலம் கடலில் தூக்கி வீசப்பட்டதாகவும், அது பின்னர் சபா கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் உண்மையல்ல என்று தெரியவந்ததுள்ளது.
இது வெறும் புரளிதான் என்று சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஹசானி கசாலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எந்தவொரு தகவலும் தங்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய தகவல்களை யாரும் நம்பவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், உரிய தரப்பினரிடம் உறுதி செய்துகொள்ளாமல் இத்தகைய தகவல்களைப் பரப்பவோ, பகிரவோ வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அண்மையில் மீனவர்கள் சிலர் தாங்கள் பிடித்த மீன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அதில் மீன்களுக்கு மத்தியில் இறந்து போனவரின் உடலும் காணப்பட்டது.
"அந்தப் படத்தின் கீழ், இந்தியாவில் கடலில் தூக்கி வீசப்பட்ட இந்த உடல் சபா கடல் பகுதியை வந்தடைந்துள்ளது. இனி இங்குள்ள மீன்களை யார் தைரியமாக உட்கொள்ள முன்வருவர்?
மீன்கள் இப்போது வேறுவிதமான ருசியில் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை," என்று அந்த நபர் பதிவிட்டுள்ளார்.
இந்தத் தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவியது. இதையடுத்து சபா காவல்துறை ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm