நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அஸ்மின் அலி பதவி விலக வலியுறுத்தி இணையம்வழி ஒரு லட்சம் கையெழுத்துகள் திரட்டப்பட்டன

கோலாலம்பூர்:

அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி அமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக இணையம் வழி அத் தரப்பினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைக்கு இணையம் வழி கையெழுத்துகள் திரட்டப்படுகின்றன. அந்த வகையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முழு அளவிலான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும்போது பெரிய தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார் என்பது அஸ்மின் அலி மீதான புகாராகும்.

இப்படி ஒரு தகவல் வெளியானதும் அஸ்மின் அலிக்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிட்டனர். அவர்களில் சிலர் அமைச்சர் பதவியில் இருந்து அஸ்மின் அலி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந் நிலையில் அஸ்மின் அலி தனித்து இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக். கூறியுள்ளார். அமைச்சரைச் சுற்றி வசதி  படைத்த தொழிலதிபர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் அஸ்மின் அலிக்கு நஜீப் மறைமுக எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அஸ்மின் அலி தரப்பு ஏற்கவில்லை. தமது அமைச்சு மட்டும் அல்லாமல் மேலும் 15 அமைச்சுகளும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கும் நடைமுறையில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

எனினும் அவர் பதவி விலக வலியுறுத்தி இணையம் வழி நடத்தப்பட்ட கையெழுத்து திரட்டும் படலம் நேற்று தொடங்கியது. அதில் ஏராளமானோர் பங்கேற்று பதவி விலகும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

இந்த விவகாரம் டுவிட்டர் உள்ளிட்ட தளங்களில் அதிகம் பின்பற்றப்படும் பதிவாகவும் உருவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset