
செய்திகள் மலேசியா
தடுப்பூசி போடப்படுவது கட்டாயமாக்கப்படலாம்: பிரதமர் தகவல்
புத்ராஜெயா:
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி போடப்படுவது கட்டாயமாக்கப்படலாம் எனப் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின் கூறியுள்ளார்.
தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக ஆய்வு நடத்தும்படி தடுப்பூசி ஆலோசனை குழுவிடம் அவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
மலேசியாவில் மந்தை எதிர்ப்புச் சக்தியை உருவாக்கவேண்டும் என அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசிக்கான முன்பதிவு குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதாகத் தெரியவருகிறது.
இதையடுத்தே தடுப்பூசி கட்டாயம் என்ற நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது என பிரதமர் கூறியதாக பெர்னாமா செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதேவேளையில் தடுப்பூசிக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படவில்லை என கடந்த ஜனவரி மாதம் தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கைரி ஜமாலுதீன் தெரிவித்திருந்தார்.
நேற்று இரவு வரையிலான நிலவரப்படி மலேசியாவில் 3.3 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm