செய்திகள் மலேசியா
ICUவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்:
கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழக்கக் கூடிய ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இந்தாண்டு வெகுவாக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே போல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் அதே வயது வரம்பிலான குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக அந்த அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
"குழந்தைகளின் இறப்பு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து நிறைய கேள்விகளை எதிர்கொண்டுள்ளோம்.
"கடந்த ஆண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மூன்று பேர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தனர். ஆனால் இந்த ஆண்டு மே வரையிலான முதல் ஐந்து மாதங்களிலேயே அதே அளவிலான மரணச்சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
"மேலும், கடந்த ஆண்டு எட்டு குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 27 குழந்தைகள் அப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வகுத்துள்ள அனைத்து SOPக்களையும் முறையாகப் பின்பற்றி குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கித் தர வேண்டியது பெற்றோரின் கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், வீட்டில் உள்ள பெரியவர்கள் இயன்ற விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் அவசியம் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
