நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவக உரிமையாளருக்கு RM 10,000, ஐந்து வாடிக்கையாளர்களுக்கு RM 2000 அபராதம்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் இயங்கி வரும் ஓர் உணவகத்தின் உரிமையாளருக்கும், ஐந்து வாடிக்கையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது பின்பற்ற வேண்டிய SOPக்களை மீறிய குற்றத்தின் பேரில் உரிமையாளருக்கு 10,000 ரிங்கிட்டும், வாடிக்கையாளர்களுக்கு தலா 2,000 ரிங்கிட்டும் அபராதமாக விதிக்கப்பட்டது என கோலாலம்பூர் குற்றத்தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் தலைவரான அஸ்மான் அயோப் (Azman Ayob) தெரிவித்தார்.

நண்பகல் 12.45 மணியளவில் தலைநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் அமைந்திருக்கும் அந்த உணவகத்தில் போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஐந்து வாடிக்கையாளர்கள் அங்கு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

SOPக்களின்படி, இதற்கு அனுமதி இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, அபராதம் விதிக்கப்பட்டது என்ன அஸ்மான் அயோப் தெரிவித்தார்.

MCO காலத்தில்  SOPக்களைப் பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அவர், போலிசாரின் சோதனை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset