நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 தொற்றுக்கு 3,490 பேர் பாதிப்பு

புத்ராஜெயா:

நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,752,490 ஆக உயர்ந்துள்ளது.

கோலாலம்பூரில் ஆக அதிகமாக 915 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில்  796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேராக்கில் 303, சபாவில் 272, நெகிரி செம்பிலானில் 241, பினாங்கில் 142, மலாக்காவில் 141,  சரவாக்கில் 133, புத்ராஜெயாவில் 130, ஜொகூரில் 116, கெடாவில் 97, கிளந்தானில் 83, பகாங்கில் 76, திரெங்கானுவில் 37, லாபுவானில் 5, பெர்லிசில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,454 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

75 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.

சிலாங்கூரில் 117,  சபாவில் 59, ஜொகூரில் 61 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset