நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூவார் காவல்துறையினது குடியிருப்புகளை சீரமைக்க 1 மில்லிய ரிங்கிட் ஒதுக்கீடு: மாநில அரசு அறிவிப்பு

ஜொகூர் பாரு: 

மூவார் மாவட்ட காவல் தலைமையகத்தின் கீழ் உள்ள காவல்துறையினது குடியிருப்புகளைப் சீரமைக்க ஜொகூர் மாநில அரசு 1 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.

ஜொகூர் முதலமைச்சர் டத்தோ ஒன் ஹாபீஸ் காசி கூறுகையில், காவல்துறையினருக்கு பாதுகாப்பான, வசதியான குடியிருப்பு சூழலை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

மூவார் மாவட்டத்துக்குச் சென்றபோது, நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த காவலர் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டதாகவும், பல வீடுகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையும், அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பது கவனிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களின் நலனைக் கவனிப்பது அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

இந்நிதி ஒதுக்கீடு மூலம் குடியிருப்புகள் மேம்படுத்தப்பட்டு, அங்கு பணியாற்றும் காவல்துறையினருக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset