நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கில் பரபரப்பு: காட்டில் சிக்கிய 22 வயது இளைஞர் 6 நாட்களுக்குப் பின் மீட்பு

கூச்சிங்:

சரவாக், கனோவிட் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் காணாமல் போன 22 வயது இளைஞர், ஆறு நாட்களுக்குப் பிறகு இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

சுங்கை பென்யுலாவ் பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் லீ அபாங் என்ற இளைஞர், கடந்த மார்ச் 7-ஆம் தேதி மாலை தனது வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறியுள்ளார். 

அடையாள அட்டையோ அல்லது கைப்பேசியோ இன்றி அவர் சென்றதால், கவலையடைந்த குடும்பத்தினர் போலிசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை, காவல்துறை, கிராம மக்கள் இணைந்து கடந்த ஐந்து நாட்களாகத் தீவிர தேடுதலில்  ஈடுபட்டனர்.

இன்று காலை 11.54 மணியளவில், தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார். 

ஆறு நாட்களாகக் காட்டில் உணவுயின்றி தவித்ததால் அவர் உடல் சோர்வுடன் காணப்பட்டார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், முதலுதவிக்குப் பிறகு மேலதிக சிகிச்சைக்காக கனோவிட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த மீட்புப் பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், பொதுமக்களும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset