செய்திகள் மலேசியா
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
புத்ராஜெயா:
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேசிய இந்து கோயில்கள் வழிகாட்டுதல் குழு இந்த பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன், மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷிகுமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
நாட்டில் இந்து ஆலயங்கள் தொடர்பான சர்ச்சைகள் தொடர் கதையாகி உள்ளது.
இந்த பிரச்சினைகள் குறித்து பிரதமரின் அரசியல் செயலாளர் சான் மிங் காய் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
ஆலயங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இந்த விஷயங்களை இணக்கமான, ஆக்கபூர்வமான முறையில் எவ்வாறு நிவர்த்தி செய்து தீர்க்க முடியும்.
அனைத்து தரப்பினரிடையேயும் நல்லிணக்கம், பரஸ்பர மரியாதையை உறுதி செய்வது குறித்து இந்த விவாதத்தில் கவனம் செலுத்தியது.
இந்து சமூகத்திற்கான நடைமுறை, சீரான தீர்வுகளைக் கண்டறிவதில் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கும் பிரதமர் துறைக்கு நன்றி என தேசிய இந்து கோயில்கள் வழிகாட்டுதல் குழு ஓர் அறிக்கையில் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 6:10 pm
ஜாமீனுடன் விடுவிக்கப்பட்ட 'SOSMA' கைதிகள்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
