நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி

பாங்கி:

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் இந்திய மாணவர் பிரதிநிதி மன்றம், யூகேஎம் கபடி கழகம் இணைந்து “மாவீரன் 3.0” எனப்படும் பல்கலைக்கழக  இடையிலான விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விளையாட்டு போட்டி வரும்0z ஏப்ரல் 5 ஆம் தேதி மலேசிய தேசிய பல்கலைக்கழகம் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இடம்பெறும் முக்கிய விளையாட்டுகள் பின்வருமாறு:
• கபடி
• கால்பந்து
• பூப்பந்து

பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதுடன், விளையாட்டு மனப்பான்மை மற்றும் ஆரோக்கியமான போட்டி உணர்வை வளர்ப்பதே இவ்விளையாட்டு போட்டியின் முக்கிய நோக்கமாகும். மலேசியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ள இந்த பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வை சிறப்பாக நடத்த நிதி ஆதரவும் அனுசரணையும் மிகவும் அவசியமாக உள்ளது.

எனவே, எங்கள் முயற்சிக்கு தங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்று  இந்திய மாணவர் பிரதிநிதி மன்றத்தின் நிகழ்ச்சி தலைவர் கீர்த்திகன் மகாலிங்கம் கேட்டும் கொண்டார். தொடர்புக்கு: 014-6070331

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset