செய்திகள் மலேசியா
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
கோலாலம்பூர்:
எஹ்சான் வர்த்தக குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது.
அவ்வகையில் இன்று சிகாம்புட்டில் 200 பேருக்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தலைமையில் வழங்கப்பட்டது என்று அதன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் கூறினார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு எஹ்சான் வர்த்தக குழுமம் ரமலான் உதவிகளை வழங்கி வருகிறது.
இவ்வாண்டும் கிட்டத்தட்ட 5,000 பேருக்கு இந்த உதவிகளை எஹ்சான் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று சிகாம்புட் வட்டாரத்தில் உள்ள 200 பேருக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது.
வசதிக் குறைந்தவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டரசுப் பிரதேச அமைச்சரும் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்னா இயோ தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
அமைச்சர் இவ்விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சி.
குறிப்பாக இவ்விழா கூட்டரசுப் பிரதேச அறவாரியம் உட்பட பல அமைப்புகளுடன் நடத்தப்பட்டது.
அமைச்சர் ஹன்னா இயோ துடிப்புமிக்க அமைச்சராக உள்ளார்.
அவரின் வருகை கூட்டரசுப் பிரதேசத்திற்கு மேலும் உருமாற்றத்தை கொண்டு வரும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
சரவாக்கில் பரபரப்பு: காட்டில் சிக்கிய 22 வயது இளைஞர் 6 நாட்களுக்குப் பின் மீட்பு
March 12, 2026, 4:53 pm
15 வயது மாணவியிடம் அத்துமீறல்: குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
March 12, 2026, 4:51 pm
4 மாத குழந்தை மரண வழக்கு: பயிற்சி இல்லாமல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்
March 12, 2026, 4:01 pm
