நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாமீனுடன் விடுவிக்கப்பட்ட 'SOSMA' கைதிகள்

ஜொகூர் பாரு: 

உயர்நீதிமன்றம் இன்று, 'வின்சென்ட் கெங்கில்' சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணையும் குறைந்த வயது இளைஞரையும் RM.20000 ஜாமினில் விடுவிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதில் SOSMA 2012 சட்டத்தின் 13(2)(a), (b) பிரிவில் குறிப்பிடப்பட்ட விலக்கு வகையை அவர்கள் உடையவர்கள் என்பதையும் நீதிபதி அதான் முஸ்தபா யூசுப் அஹமத் கருத்தில் எடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, 18 வயதுக்கு கீழானவர்கள், பெண்கள் அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் ஜாமினில் விடுவிக்கப்படலாம் என்று இந்த பிரிவு அனுமதிக்கிறது.

இருவருக்கும் குற்றச்சாட்சி சாட்சி மீது தொல்லை செய்யக் கூடாது, ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஹாஜிர் செய்ய வேண்டும், வழக்கு முடிந்த வரை கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் போன்ற கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 12 அன்று, இவர்களுடன் மற்ற நால்வர், மார்ச் 2025 முதல் ஜனவரி 15, 2026 வரை  கூலாய், தாமான் லாஜெண்டா புத்ரா, ஜாலான் லாஜெண்டா 34 என்ற இடத்தில் வென்சென்ட் கெங்கில் உறுப்பினராக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மாவட்ட நீதிமன்றம், மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டம் 130V(1), (செயல் 574) படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவார்கள்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset