செய்திகள் மலேசியா
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
ஹுலு சிலாங்கூர்:
ஹுலு சிலாங்கூரின் புக்கிட் சென்தோசா பகுதியில் ஒரு காரும், அதிவேக மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் 88 வயது பாட்டியும், எட்டு மாத ஆண் குழந்தையும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உயிரிழந்தார்.
இன்று காலை 8.58 மணியளவில் ஜாலான் பூங்கா கெர்தாஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. குடும்பத்தினர் ஓட்டிய பெரோடுவா பெஸ்ஸா கார், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் மோதப்பட்டதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் அந்த குழந்தையை, குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் இந்த விபத்து நடந்ததாக உறவினர் முஹம்மத் அக்பர் அப்துல் சுகோர் (28) தெரிவித்துள்ளார்.
விபத்தில் அவரது தந்தையும் தாயும் காயமடைந்துள்ளனர். தந்தைக்கு லேசான காயங்களும் மனஅழுத்தமும் ஏற்பட்டுள்ளதுடன், தாயின் இடது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்பரின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எட்டு மாத குழந்தை சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:27 pm
சரவாக்கில் பரபரப்பு: காட்டில் சிக்கிய 22 வயது இளைஞர் 6 நாட்களுக்குப் பின் மீட்பு
March 12, 2026, 4:53 pm
15 வயது மாணவியிடம் அத்துமீறல்: குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
March 12, 2026, 4:51 pm
4 மாத குழந்தை மரண வழக்கு: பயிற்சி இல்லாமல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்
March 12, 2026, 4:01 pm
