நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலைவாய்ப்பு மோசடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 168 மலேசியர்கள்

கோலாலம்பூர்:

வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளில் சிக்கிய 168 மலேசியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மோசடி எனத் தெரியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்கள், அந்தந்த நாடுகளைச் சென்றடைந்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது நடமாட்டக் கட்டுப்பாடுகளில் உள்ளனர் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து காவல்படை செயலாளர் நூர்ஸியா சாதுத்தீன் Noorsiah Saaduddin, மொத்தம் 238 மலேசியர்கள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 70 பேர் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

முகநூலில் வெளிவந்த வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி மலேசியர்கள் ஏமாந்துபோனதாகக் குறிப்பிட்ட அவர், விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள முகவரை பலர் தொடர்பு கொண்ட பிறகு மோசடி வலையில் சிக்கிக் கொள்வதாகத் தெரிவித்தார்.

"அந்த முகவர்கள் ஏமாறும் மலேசியர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து செலவை ஏற்றுக் கொள்வதாகக் கூறுவார்கள்.

"இதை நம்பி வேலை வாய்ப்புள்ளதாகக் கருதும் நாடுகளுக்குச் செல்லும் மலேசிய குடிமக்களின் பயண ஆவணங்கள், கைபேசிகள் அழிக்கப்பட்டு விடும்.

"அதன் பின்னர் மோசடிக்காரர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வேலை பார்க்க வேண்டியிருக்கும். பலர் இணையம் வழி நடக்கும் மோசடிகளுக்கு துணைபோக வேண்டிய நிலைக்கு ஆட்படுகிறார்கள்.

"இவ்வாறு வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் மலேசியர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சுடனும் இண்டர்போல் அமைப்புடனும் இணைந்து காவல்துறை மேற்கொண்டுள்ளது," என்றார் Noorsiah Saaduddin.

தொடர்புடைய செய்திகள்

+ - reset