நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹிஷாமுடின் அம்னோவுக்குத் திரும்பத் தயாராக உள்ளார்

கோலாலம்பூர் -

முன்னாள் அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், கேட்டுக் கொள்ளப்பட்டால் கட்சியில் மீண்டும் போராடத் தயாராக உள்ளார்.

மூன்று ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும், தான் ஒருபோதும் கட்சியை விட்டு வெளியேறவில்லை என்று செம்பரோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் 
வலியுறுத்தினார்.

மூன்று வருட இடைநீக்கத்திற்குப் பிறகும், நான் கட்சியை ஒருபோதும் தாக்கியதில்லை. 

முன்னதாக, உச்சமன்றம் என்னை இடைநீக்கம் செய்ய முடிவு செய்திருந்தது.

எனவே, கட்சித் தலைமை என் மீதான இடைநீக்கத்தை நீக்குவதில் உண்மையாக இருந்தால், நான் அம்னோ கட்சிக்காக தொடர்ந்து போராடத் திரும்புவேன் என்று அவர்  தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக 2023ஆம் ஆண்டில், அம்னோ ஹிஷாமுடினின் உறுப்பினர் பதவியை ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset