
செய்திகள் மலேசியா
இரு தினங்களில் அபராதங்கள் மூலம் 210,500 ரிங்கிட் வசூலிப்பு: இது ஜோகூர் நிலவரம்
ஜோகூர்:
முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 3.0 அமல்படுத்தப்பட்ட முதல் 2 நாளில் ஜோகூர் காவல்துறை 210,500 மலேசிய ரிங்கிட் மதிப்பிலான அபராதங்களை விதித்துள்ளது.
மொத்தம் 82 அபராத விதிப்புகள் மூலம் இத்தொகை திரண்டுள்ளதாக ஜோகூர் காவல்துறை தலைவர் அய்யூப் கான் மைதின் பிச்சை தெரிவித்துள்ளார்.
முழு முடக்க நிலை அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை மொத்தம் 4,423 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோகூர் பாரு செலாதான், இஸ்கந்தர் புத்ரி, செகாமட் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, ஒரே காரில் அதிகமானோர் பயணம் மேற்கொண்டது, கட்டட வளாகங்களில் நுழையும்போது அங்குள்ள பதிவேடுகளில் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்யாதது, வெப்பநிலையை குறிப்பிடாதது ஆகிய குற்றங்களுக்காக அபராதங்கள் விதிக்கப்பட்டது என அய்யூப் கான் தெரிவித்துள்ளார்.
MCO 3.0வின் முதல் இரண்டு நாட்களில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள 3,383 விண்ணப்பங்கள் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அவற்றும் 82 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 3,296 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், உரிய காரணங்கள், ஆவணங்கள் இன்றி பயணம் மேற்கொள்ள முயன்ற 235 வாகனங்கள் சாலைத் தடுப்புகளில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm