
செய்திகள் உலகம்
இலங்கை வந்தடைந்த கப்பல் குறித்து சீனா விளக்கம்
கொழும்பு:
சீன உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.
இலங்கை எம்.பி.க்கள் சிலரும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் சீன உளவுக் கப்பலை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தக் கப்பலின் இலங்கை பயணம், எந்நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் உளவுக் கப்பல் வருகைக்கு இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கோரியிருந்தது.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட விரிவான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து சீன உளவுக் கப்பலின் வருகைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இலங்கை தெரிவித்தது.
அதன்படி, சீன உளவுக் கப்பலானது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் வந்தடைந்தது. அக்கப்பல் வரும் 22ஆம் தேதி வரை அங்கு நிலைநிறுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சீன கப்பல் அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச விதிகளுக்கு உள்பட்டே யுவான் வாங் கப்பல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்நடவடிக்கைகள் எந்த நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் பாதிக்காது.
எனவே, அக் கப்பலின் பயணத்தை எந்தவொரு மூன்றாவது நாடும் தடுக்க முயற்சிக்கக் கூடாது' என்றார்.
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am